ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

இராகம்:- சகானா - Ragam:- Sahana.

சகானா இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் 
சட்சம் (ச), 
சதுச்ருதி ரிசபம் (ரி2), 
அந்தர காந்தாரம் (க3), 
சுத்த மத்திமம் (ம1), 
பஞ்சமம் (ப), 
சதுச்ருதி தைவதம் (த2), 
கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. 

இதன் ஆரோகண அவரோகணங்கள்.
ஆரோகணம்:ச ரி2 க3 ம1 ப ம1 த2, நி2
அவரோகணம்:ச நி22 ப ம1 க3 ம1 ரி2 க3 ரி2 ச

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரோகணம்:-> ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
உம்:- ஸ ரி க ம ப த நி ஸ்.

அவரோகணம்:-> இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
உம்:- ஸ் நி த ப ம க ரி ஸ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் மத்திமம். காந்தாரம் என்பனவும் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகிறது.

இந்த ராகத்தில் வெளிவந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்.

(1) பாடல்:- "பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில்..."
படம்:- வீர அபிமன்யு - 1965;
இசை:- K.V.மகாதேவன்;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசிலா;
நடிப்பு:- ஏவிஎம்.ராஜன், காஞ்சனா.



(2) "எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்...." 
படம்:- பொம்மை;
ரிலீஸ்:- 22nd ஏப்ரல் 1964;
இசை:- S.பாலசந்தர்;
பாடல் ஆசிரியர்:- வித்வான் வே.லக்ஷ்மணன்;
பாடியவர்:- P.சுசிலா;
நடிப்பு:- L.விஜயலட்சுமி.

http://youtu.be/J_W5u3U4FYQ 


(3) பாடல்:- "ருக்கு ருக்கு ருக்கு....."
திரைப்படம்:- அவ்வை சண்முகி;
 ரிலீஸ்:- 10th நவம்பர் 1996; 
இசை:- தேவா;
பாடல் ஆசிரியர்:- வாலி;
பாடியவர்கள்:- கமல்ஹாசன், சுஜாதா;
நடிகர்கள்:- கமல்ஹாசன்,மீனா.

http://youtu.be/DTRA_Ng6WEU 


(4) பாடல்:- "அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா தலைவா சுகமா சுகமா..." 
திரைப்படம்:- பார்த்தாலே பரவசம்;
ரிலீஸ்:- 14 th நவம்பர் 2001;
இசை:- A.R.ரஹ்மான்; 
பாடல் ஆசிரியர்:- வைரமுத்து;
பாடியவர்கள்:- சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்;
நடிகர்கள்:- மாதவன், சிம்ரன்.

http://youtu.be/c3v_-4Qb0yw


(5) பாடல்:- "பூந்தேனா....."  
திரைப்படம்:- ஈர நிலம்; 
ரிலீஸ்:- 08th ஆகஸ்ட் 2003;
இசை:- சிற்பி;
பாடியவர்:- சின்மயி.