வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அலங்கார பொன் ஊஞ்சலே - சொன்னது நீ தானா (1978)

அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே . (அலங்கார...) . வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் அழகு கலைகள் நிலவும் எந்தன் . (அலங்கார...) . ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் இளமை குலுங்க இனிமை வழங்கும் . (அலங்கார...) . காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் கோவில் காணும் பூசைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் புதிய வழியை எடுத்து சொல்லும் . (அலங்கார...)
.
Movie:- Sonnathu Neethana; Year:- 1978; Music Director:- Ilayaraja; Lyricist:- C.N.Muthu; Singers:- Malaysia Vasudevan, Jency (Humming); Cast:- Jaiganesh, Sumithra;
Produced by:- M.S.Chellappan - Vijaya Raja Pictures;
Direction:- C.N.Muthu.
.......




https://mio.to/album/Sonnathu+Nee+Thaana+%281978%29









படைத்தானே பிரமதேவன்

படைத்தானே பிரமதேவன் பதினாறு வயது கோலம் இது யார்மீது பழிவாங்கும் சோதனை - உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை . அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா - இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா நீயின்றி வானத்தில் நிலவேதடி - அது உனை பாடும் தாலாட்டு நீலாம்பரி இது யார் மீது பழி வாங்கும் சோதனை - உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை . (படைத்தானே...) . உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி - அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது அது கோடானு கோடியை ஏய்க்கின்றது ஒரு அருள் வேண்டி நான் கேட்டேன் தேவனை - இனி தினந்தோறும் வரவேண்டும் சுகவேதனை . (படைத்தானே...)
~~~~~~~~

திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே; ரிலீஸ்:- 1975; இசை:- வி. குமார்; பாடல்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்கள்:- SPB; நடிப்பு:- முத்துராமன், மஞ்சுளா; தயாரிப்பு & இயக்கம்:- ஜெமினி S.S. பாலன்.

~~~~~~

https://youtu.be/hPhIMXcTorQ



செவப்புக்கல்லு மூக்குத்தி

செவப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா தங்க முகத்தில குங்குமப் பொட்டு வைச்சுக்கிட்டு - நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
தான் போறப் போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னு தான் சொல்லுமோ பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ . (செவப்பு...) . மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தேகம் நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம் புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா . (செவப்பு...) . வெளக்கு வச்சு பாய் போட்டு தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா வெடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம் நெனச்சிருப்போமா  திருநாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம் தந்து பெறலாம் . ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பிள்ள வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி சொல்லு மச்சான் என்னை கள்ளச்சிரிப்பிலே கொள்ளையடிச்சது இந்த மச்சான்
~~~~~~ 
திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே
ரிலீஸ்:- 1975;
இசை:- வி. குமார்; 
பாடல்:- கண்ணதாசன்; 
பாடியவர்கள்:- TMS, பி. சுசிலா; 
நடிப்பு:- முத்துராமன், மஞ்சுளா; 
தயாரிப்பு & இயக்கம்:- ஜெமினி S.S. பாலன்.   
..

https://youtu.be/mzgKodQXZ-M 





நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை

நான் பேச வந்தேன் சொல்ல தான்
ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்... நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை,  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள், ஆலிலை மீது, தழுவிடும் காற்று சல சல சல வென வரும் கீதங்கள்,  குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை......  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கல வென வரும் எண்ணங்கள்,  ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பள பள பள வென வரும் கின்னங்கள்,  சொல் என கண்ணும்   நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஒருநாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை..... . நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை.
~~~~~~~~
Movie:-Paalooti Valartha Kili, - பாலூட்டி வளர்த்த கிளி; 
Year:- 1976;
Music:- Ilayaraja;
Lyrics:- Kannadasan; Singers:-SPB, S.Janaki; Actors:- Vijayakumar & Sripriya.;
Director:- Devaraj, Mohan.
~~~~~~~~
https://youtu.be/9ZNJncW2220



கணக்குப் பார்த்து காதல் வந்தது - ஆளுக்கொரு ஆசை

கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... ) . இலக்கிய காதலுக்கு இங்கே வேலையில்லை எல்லாமே காவியம் இல்லை கற்பனை உலகத்திலே ஆசைகளும் இல்லை கனவுக்கும் வேலை இல்லை நடுத்தர குடும்பத்துக்கு பட்ஜெட்தானே எல்லை வரவுக்கு மேல் செலவு வந்தால் எந்நாளுமே தொல்லை ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... ) . ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை வேறு வேறு எல்லாமே இணைவது இல்லை ஒருவரையொருவர் நன்றாய் புரிந்துக்கொள்ளும் முன்னே சேர்ந்தால் வருவது தொல்லை பின்னால் நடப்பதெல்லாம் முன்னால் புரிவதில்லை முன்னால் புரிந்துவிட்டால் வாழ்வில் சுவையில்லை ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... )

.........................

திரைப்படம்:-  ஆளுக்கொரு ஆசை;  
ரிலீஸ்:- 09th டிசம்பர் 1977; 
இசை:- இளையராஜா; 
பாடல்:- பஞ்சு அருணாச்சலம்; 
பாடியவர்:- T.M. சௌந்தர்ராஜன்;  
நடிப்பு:-  ஜெயசித்ரா, R. முத்துராமன்; 
தயாரிப்பாளர்:- ஏ. ராமமூர்த்தி & சினி எண்டர்பிரைசெஸ்
எஸ். ராமமூர்த்தி;
டைரக்சன்:- S.P. முத்துராமன்.  


https://youtu.be/D6nc_IqCYaA 






முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி 

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி 
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
சித்தன வாசலிலே அழகு சித்திரம் பாடுதய்யா 
சித்தன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா - அந்த 
சித்திர மேனியிலே உந்தன் முத்திரை போடுதய்யா 

வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா - புது 
வெள்ளி ரத்தம் போலெ உந்தன் வடிவம் பொங்குதய்யா  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா 
.
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
அது ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது எத்தனை கதையடியோ 

நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் 
நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் - அன்று 
எல்லா கலையும் வில்லாய் எடுத்து வேலாலே தருவேன் 
.
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா  
.
பாட்டுக்கால்கள் பட்டதனாலே பஞ்சு விளைந்ததடி - உன் 
சிட்டுக் கைகள் தொட்டதனாலே நெஞ்சும் மலர்ந்ததடி 
கொட்டும் மழையும் பனியும் தென்றலும் கனலாய் காயுதய்யா - உன் 
கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால் குளிராய் குளிருதய்யா 

பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
பாலும் பழமும் கைகளில் ஏந்தி வருவதும் எந்நாளோ 
பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
.
................
திரைப்படம்:- நல்ல முடிவு; 
ரிலீஸ்:-  மார்ச் 2nd, 1973;
இசை:-  MSV;  
பாடல்:- கண்ணதாசன்; 
பாடியவர்கள்:- TMS, P.சுசிலா;   
நடிப்பு:- ஜெமினி கணேசன், ஜெயந்தி;
தயாரிப்பு:- S.A. ராஜமாணிக்கம்; (பூங்கோதை பிக்சர்ஸ்); 
இயக்குனர்:- C.N. சண்முகம்.   

................







ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (1955)

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி ஒண்ணிலே இருந்து - சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் திண்டாட்டம் - சம்பளத் தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் . பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே தேதி ஒண்ணிலே - மனுஷன் படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே பின்னும் மூணாம் பேஸ்து விழுந்தது போலே முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே . ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் . தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர் கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம் கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே - எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே.

~~~~~~~~~~~
படம்:- முதல் தேதி; 
ரிலீஸ்:- 12th  மார்ச், 1955; 
இசை:- T.G. லிங்கப்பா; 
பாடல் வரிகள்:- உடுமலை நாராயணகவி; 
பாடியவர்:- N.S. கிருஷ்ணன்; 
நடிப்பு:-  N.S. கிருஷ்ணன் & T.A,மதுரம்; 
கதை:- தாதா மிராசி; 
தயாரிப்பு:- B.R. பந்துலு;  (இப்படம் தான் முதல் தயாரிப்பு) 
திரைக்கதை, வசனம் & இயக்கம்:- P. நீலகண்டன்.     
~~~~~~~~~~~~ 




என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள

என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல. என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல.... . (என்ன...). . எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம் நான் கொள்ள இன்று நீதானே காரணம் ஆஹா.......ஆஹா......ஆ.....ஆ......ஆஹா ஆஹா... . (என்ன...) . மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ........ லாலா.......லாலா......லாலா.......லாலா.......லாலா... . (என்ன...) . கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும் காலங்கள் யாவும் இனிதாக வேண்டும் பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும் கல்யாண கோலம் நான் காண வேண்டும் . (என்ன...)
~~~~~~~~~~~~

திரைப்படம்:- அதிஷ்டம் அழைக்கிறது
ஆண்டு:- 1976;
இசை:- V. குமார்;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- P. சுசிலா, TMS;
நடிப்பு:- ஸ்ரீவித்யா, முத்துராமன் & ஜெயசுதா;
இயக்கம்:- A. ஜெகந்நாதன்.
~~~~~~~~~~




காத்திருந்தேன் கட்டியணைக்க

காத்திருந்தேன் கட்டியணைக்க கனி இதழில் முத்து பதிக்க காத்திருந்தேன் கட்டியணைக்க கனி இதழில் முத்து பதிக்க இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டி எடுக்க வாரிக் கொடுக்கும் கன்னி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது வாரிக் கொடுக்கும் கன்னி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது உறவில் இன்பம் அள்ளித் தந்தது . காத்திருந்தேன் கட்டியணைக்க கனி இதழில் முத்து பதிக்க . பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன் மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது காதலர் கை பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன் தேன் சுவையோ இல்லை மான் சுவையோ என நான் துடித்தேன் இந்த வேளையிலே நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே . காத்திருந்தேன் கட்டியணைக்க கனி இதழில் முத்துப் பதிக்க . பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல் பாதரசம் என ஓடிடும் பார்வையில் காதல்ரசம் தரும் கன்னியின் அருகே நில் நில் நில் ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை அணைத்திடவே இந்த நாடகமோ நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில் கேள்விகள் நூறு கேட்கனுமா . காத்திருந்தேன் கட்டியணைக்க கனி இதழில் முத்து பதிக்க இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டி எடுக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
~~~~~~~

திரைப்படம்:- பெண் ஒன்று கண்டேன்;
ரிலீஸ்:- 11th ஜூலை,1974;
இசை:- MSV;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- SPB, P. சுசிலா;
நடிப்பு:- முத்துராமன், பிரமிளா.

............

https://youtu.be/9R3gwwfX-9I


தேவி என் தேவி நீ தானே - வேலி

தேவி என் தேவி நீ தானே - அழகிய 
வேலி பொன் வேலி நான் தானே 
அன்னமே உனது அழகினில் கண்படும் 
முன்னமே உனது நிழலுக்கும் திரையிடவோ 
ஆ ஆ 
.
தேவி உன் தேவி நான் தானே - அழகிய 
வேலி பொன் வேலி நீதானே 
அன்பனே எனது அழகினில் கண்படும் 
முன்னமே எனது நிழலுக்கும் திரையிடவா 
ஆ ஆ 
.
தேவி என் தேவி நீ தானே...
வாடினாள் இந்தப் பூவனம் - உந்தன்  
பார்வைதான் எந்தன் ஜீவனம் 
வாடினாள் இந்தப் பூவனம் - உந்தன்  
பார்வைதான் எந்தன் ஜீவனம் 
மெத்தை மீதெனை முத்துப் பூங்கொடி தொற்றித் தூங்கிடுமோ 
அறியாமலே அறை நாடகம் அரங்கேறுமோ 
ஆ ஆ 
மெத்தை மீதெனை முத்துப் பூங்கொடி தொற்றித் தூங்கிடுமோ 
அறியாமலே அறை நாடகம் அரங்கேறுமோ  
தீராத மோகம் நான் தீர்க்கவா 
யார் போட்ட கோடு நீ தாண்டி வா 
ரகசியம், ரகசியம், 
கால நேரம் பார்த்து வா 
தேவி என் தேவி நீ தானே - அழகிய 
வேலி பொன் வேலி நான் தானே 
அன்பனே எனது அழகினில் கண்படும் 
முன்னமே எனது நிழலுக்கும் திரையிடவா 
ஆ ஆ 
.
தேவி என் தேவி நீ தானே... 
பார்வையால் ஒரு சேதியோ - இமை 
சாய்வதும் ஒரு ஜாடையோ 
பார்வையால் ஒரு சேதியோ - இமை 
சாய்வதும் ஒரு ஜாடையோ 
கள்ளப் பார்வையில் உள்ளத்தாமரை மெல்லப் பூத்ததுவோ 
சுக லீலையில் இடைவேளையே கிடையாதடி 
ஓ ஓ 
கள்ளப் பார்வையில் உள்ளத்தாமரை மெல்லப் பூத்ததுவோ 
சுக லீலையில் இடைவேளையே கிடையாதடி 
உன் தோள்கள் என்ன இடி தாங்கியோ 
என் பெண்மை என்ன சுமை தாங்கியோ 
மலர்களின் தலையிலே வண்டு என்ன பாரமோ 
தேவி உன் தேவி நான் தானே - அழகிய 
வேலி பொன் வேலி நீதானே 
அன்னமே உனது அழகினில் கண்படும் 
முன்னமே உனது நிழலுக்கும் திரையிடவோ 
ஆ ஆ 
தேவி உன் தேவி நான் தானே 
தேவி என் தேவி நீ தானே.
~~~~~~~~~~~~~ 
திரைப்படம்:- வேலி; 
ரிலீஸ்:- 24th ஜூலை 1985; 
இசை:- சங்கர், கணேஷ்; 
பாடல்:- வாலி; 
பாடியவர்கள்:- P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்; 
நடிப்பு:- ராஜேஷ், சரிதா; 
புரடக்சன்:- சுனிதா சினி ஆர்ட்ஸ்; 
இயக்கம்:- துரை. 
~~~~~~~ 


~~~~~~~~~~~~~~~~~ 


தாழை மடல் சிரிப்பு - தங்க வளையல்

தாழை மடல் சிரிப்பு  
வாழை உடல் விரிப்பு  
ஆடிவரும் அன்னம் அல்லவா நீ 
ஆடிவரும் அன்னம் அல்லவா  

மாலை தந்த சிறப்பு 
சோலை கண்ட வனப்பு 
ஆலை கொண்ட கோலமல்லவா நீ 
ஆலை கொண்ட கோலமல்லவா 
நடையினில் நடனத் தேர்வலம்,  
இடையினில் பருவ ஊர்வலம்,  
தடையில்லை இன்னும் தயக்கமா 
விடையில்லை நெஞ்சில் மயக்கமா 
தட்டுடன் பள்ளிக்கூடம் - அதை 
தொட்டதும் தொடங்கும் பாடம் 
கற்றிட வெட்கம் மூடும் - பின் 
பெற்றிட பெண்மை நாடும் 
தாழை மடல் சிரிப்பு  
இதழும் விழியும் கொஞ்சும் 
இன்னொருமுறை எனக்கெஞ்சும் 
அலையென வளரும் நெஞ்சம் 
கலையினில் உருகும் மஞ்சம் 
கண்களும் உன்னை தேடும் - ஒரு 
கவிதையில் உன்னைப் பாடும் 
அன்றினில் ஆவல் கூடும் - உன் 
அழகினால் ஆசை ஆடும் 
தாழை மடல் சிரிப்பு  
~~~~~~~~~~~~~~~ 

திரைப்படம்:- தங்க வளையல்;  
ரிலீஸ்:- 11th அக்டோபர் 1974; 
இசை:- கே.வி.மகாதேவன்;
பாடல்:- அவிநாசி மணி; 
பாடியவர்கள்:- TMS, LR. ஈஸ்வரி; 
நடிப்பு:- ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா.   

~~~~~~~~~~~~~~ 




நான் பெத்த மகனே நடராஜா

நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
.
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.
விலைவாசி மாறிபோச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
வேலை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
விலைவாசி மாறிபோச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
வேலை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவ‌ச‌ர‌மா வ‌ந்து பொற‌க்க‌னுமா
உங்கொப்ப‌ன‌ போல் நீயும் த‌விக்க‌ணுமா
அவ‌ச‌ர‌மாய் வ‌ந்து பொற‌க்க‌னுமா
ங்கொப்ப‌ன‌ போல் நீயும் த‌விக்க‌ணுமா
கியூவிலே நீ வ‌ந்து நிக்க‌ணுமா
குடும்ப‌த்தின் பார‌த்தை சும‌க்க‌ணுமா
.
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் ப‌க்க‌ம் கார‌ப் பாத்து நாளாச்ச்சு
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் ப‌க்க‌ம் கார‌ப் பாத்து நாளாச்ச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவ‌ண்டி தேடிப் போனா
நில‌க்க‌ரி பஞ்சம் வ‌ந்து நின்னு போச்சி
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவ‌ண்டி தேடிப் போனா
நில‌க்க‌ரி பஞ்சம் வ‌ந்து நின்னு போச்சி

பூசணிக்கா விலை இப்போ பொட‌ல‌ங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
பூசணிக்கா விலை இப்போ பொட‌ல‌ங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனைவெலை
மக‌னே உன‌க்கேன் தெரிய‌வில்லை
.
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.....
திரைப்படம்:- அத்தையா மாமியா;
ரிலீஸ்:- 15th ஆகஸ்ட் 1974;
இசை:- MSV;
பாடல்:- வாலி;
பாடியவர்:- TMS;
நடிப்பு:- ஜெய்சங்கர், உஷா நந்தினி.
...


....


பொண்ணா இல்லை பூவா - வாயாடி

பொண்ணா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு தந்த பசி தீராது சும்மா
.
(பொண்ணா...)
.
மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்
மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம் - உன் பட்டு வண்ணக் கன்னம் ரெண்டும் மின்னுதடி – மண்
தொட்டுக் கொண்ட கூந்தல் என்னைப் பின்னுதடி –உன்
பத்து விரல் முத்தமிடச் சொல்லுதடி – என்
அத்தை மகள் யாருமெனக்கில்லையடி...
.
(பொண்ணா...)
.
தோகையொன்று வந்ததென்று மேகமெல்லாம் கூடுதடி
சொப்பனங்கள் கண்டதுபோல் தேகமெல்லாம் ஆடுதடி – நீ
வெட்டி வெட்டிப் பேசுவது சொர்க்கமடி – கை
தட்டி விட்டு ஓடுவது வெட்கமடி – உன்
சின்னச் சின்னப் பொன்னிதழில் மச்சமடி – நான்
எண்ண எண்ண எண்ணம் மட்டும் மிச்சமடி
.
(பொண்ணா...)
.
ஓடையிலே வெள்ளமெல்லாம் உனைக்கண்டு சொக்குதடி
ஓடுகின்ற மான்களெல்லாம் அச்சமுற்று நிக்குதடி – நீ
தத்தித் தத்திச் செல்லுகின்ற பச்சைக்கிளி – என்
தங்கக் கையில் துள்ளி விழும் இச்சைக் கிளி – என்
உள்ளமெல்லாம் கள்ளத்தனம் பொங்குதடி – அந்த
வெள்ளத்திலும் பிள்ளைக் குணம் தங்குதடி

அடி..வாயாடி
.
(பொண்ணா...)
.............

திரைப்படம்:- வாயாடி;
ரிலீஸ்:- 1973;
இசை:- எம்.எஸ்.வி;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்:- டி.எம்.எஸ்;
நடிப்பு:- ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, தயாரிப்பு:- காசி பிக்ச்சர்ஸ்;

இயக்கம்:- மதுரை திருமாறன்.

`````````````

https://youtu.be/8QqdB-pUi9w