நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
.
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.
விலைவாசி மாறிபோச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
வேலை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
விலைவாசி மாறிபோச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
விஷம்போல ஏறிப்போச்சி
வேலை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்கிறப்போ
சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்கிறப்போ
சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவசரமா வந்து பொறக்கனுமா
உங்கொப்பன போல் நீயும் தவிக்கணுமா
அவசரமாய் வந்து பொறக்கனுமா
உங்கொப்பன போல் நீயும் தவிக்கணுமா
கியூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தை சுமக்கணுமா
.
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் பக்கம் காரப் பாத்து நாளாச்ச்சு
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் பக்கம் காரப் பாத்து நாளாச்ச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரி பஞ்சம் வந்து நின்னு போச்சி
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரி பஞ்சம் வந்து நின்னு போச்சி
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனைவெலை
மகனே உனக்கேன் தெரியவில்லை
.
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
.....
திரைப்படம்:- அத்தையா மாமியா;
ரிலீஸ்:- 15th ஆகஸ்ட் 1974;
இசை:- MSV;
பாடல்:- வாலி;
பாடியவர்:- TMS;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக