செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையில் நல்ல மது வண்டோ
.
(செந்தாமரையே)
.
புகுந்த வீட்டின் புது வரவு - நீ
பூத்து குலுங்கும் புது நினைவு
புகுந்த வீட்டின் புது வரவு - நீ
பூத்து குலுங்கும் புது நினைவு
மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு
மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு - அது
மன்னவன் ஏற்றிய திருவிளக்கு
இளமை தரும் மயக்கம்
இனிமை அதில் பிறக்கும்
இளமை தரும் மயக்கம்
இனிமை அதில் பிறக்கும்
.
(செந்தாமரையே)
.
நீல வானின் முழு நிலவே - உன்னை
நெருங்கி மகிழும் என் மனமே
நீல வானின் முழு நிலவே - உன்னை
நெருங்கி மகிழும் என் மனமே
ஆசை மனதின் பெண்ணமுதே
ஆசை மனதின் பெண்ணமுதே - உன்னை
அருந்த துடிக்கும் என் உறவே
கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
.
(செந்தாமரையே)
~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~
திரைப்படம்:- புகுந்த வீடு;
ரிலீஸ்:- 1972;
இசை:- சங்கர் - கணேஷ்;
பாடல்:- விசித்ரா;
பாடியவர்கள்:- A.M. ராஜா, ஜிக்கி;
நடிப்பு:- A.V.M. ராஜன், சந்திரகலா;
இயக்கம்:- பட்டு.
~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக