என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல.
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல....
.
(என்ன...).
.
எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை
ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை
மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம்
நான் கொள்ள இன்று நீதானே காரணம்
ஆஹா.......ஆஹா......ஆ.....ஆ.... ..ஆஹா ஆஹா...
.
(என்ன...)
.
மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை
மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை
உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ
ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ........
லாலா.......லாலா......லாலா..... ..லாலா.......லாலா...
.
(என்ன...)
.
கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும்
காலங்கள் யாவும் இனிதாக வேண்டும்
பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும்
கல்யாண கோலம் நான் காண வேண்டும்
.
(என்ன...)
~~~~~~~~~~~~
திரைப்படம்:- அதிஷ்டம் அழைக்கிறது
ஆண்டு:- 1976;
இசை:- V. குமார்;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- P. சுசிலா, TMS;
நடிப்பு:- ஸ்ரீவித்யா, முத்துராமன் & ஜெயசுதா;
இயக்கம்:- A. ஜெகந்நாதன்.
~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக