ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கூவாமல் கூவும் கோகிலம்.....




ஆ.. ஆ.. ஆ.. ஆஆ...
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
.
(கூவாமல் கூவும்...)
.
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை, பேதமில்லை
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை, பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே
.
கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்த்தைகள் ஏனோ?
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்

வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
மணம்கள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
~~~~~~
திரைப்படம்:- வைரமாலை;
ரிலீஸ்:- 25.09.1954;
இசை:- விஸ்வநாதன், ராமமுர்த்தி;
இயற்றியவர்:- கண்ணதாசன்;
பாடியவர்:- திருச்சி லோகநாதன், M.L.வசந்த குமாரி;
நடிப்பு:- பத்மினி, மனோகர்;
தயாரிப்பு:- A.C.பிள்ளை;
டைரக்சன்:- N.ஜகன்நாத்.
~~~~~~

வா வாத்யாரே ஊட்டாண்டே, நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...



வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு...
.
.
வாராவதிலே நின்னுகினிருந்தேன் 
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே 
அம்பிகாபதியாட்டம்..
வாராவதிலே நின்னுகினிருந்தேன் 
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே 
அம்பிகாபதியாட்டம்,
லவ்வாப் பாத்து சோக்கா பேசி 
டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி 
டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு 
படா பேஜாராச்சி நின்னு - அட 
சர்தான் வாம்மா கண்ணு 
படா பேஜாராச்சி நின்னு
.
.
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
.
.
நைனா உன் நினப்பாலே நான் 
நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆ...
நைனா உன் நினப்பாலே நான் 
நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன் 
சால்னா நெனப்பு வந்தாச்சு
அட மச்சான் ஆ........
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன் 
சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா 
பாயாக்கறியும் நீயாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா 
பாயாக்கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து 
வாராவதிக்கே போகல்லாம், 
.
.
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
.
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு..
~~~~~~
படம்:- பெம்மலாட்டம் - 1968;
இசை:- V.குமார்;
இயற்றியவர்:- வாலி;
பாடியவர்:- மனோரமா;
நடிப்பு:- மனோரமா, சோ.ராமசாமி.
~~~~~~


கல்யாண சமையல் சாதம்



ஹஹஹஹஹஹஹஹஹ
கல்யாண சமையல் சாதம்
ஹஹஹஹஹஹ

கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ

அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க
ஹஹஹஹஹஹ
இதுவே எனக்குத் திங்க

கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ

புளியோதரையின் சோறு - வெகு
பொருத்தமாய் சாம்பாரு
புளியோதரையின் சோறு - வெகு
பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு
ஹஹஹஹஹஹ
இதுவே எனக்கு ஜோரு

கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ

ஜோரான சேனி லட்டு
சுவையான சீனி புட்டு
ஜோரான சேனி லட்டு
சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு
ஹஹஹஹஹஹ
இனி இஷ்டம் போல வெட்டு

கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹ
~~~~~
படம்:- மாயா பஜார் - 1957;
இசை:- கண்டசாலா & S.ராஜேஸ்வர ராவ்; 
இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
பாடிவயர்:-  திருச்சி லோகநாதன்;
நடிப்பு:- S.V.ரெங்கா ராவ்.
~~~~~

ஆஹா இன்ப நிலாவினிலே



ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
சுவை தனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ

அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே

ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
~~~~~
படம்:- மாயா பஜார் - 1957;
இசை:- கண்டசாலா;
இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
பாடிவயர்:- கண்டசாலா, P.லீலா; 
நடிப்பு:- ஜெமினி கணேசன் +சாவித்திரி; 
            NTR + சந்தியா; 
            D.பாலசுப்ரமணியம் + லக்ஷ்மி பிரபா.
~~~~~

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே....



கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் 
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)


பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)



~~~~~~~~~~~~~~~~~

படம்:- "அடுத்த வீட்டுப் பெண்"; ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960; இசை:- ஆதிநாராயண ராவ்; பாடல்:- தஞ்சை N. ராமையா தாஸ்; பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS); நடிப்பு:- T.R.ராமசந்திரன், அஞ்சலி தேவி, K.A. தங்கவேலு, A. கருணாநிதி, Friend ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கடராமன்; திரைக்கதை, வசனம்:- தஞ்சை N. ராமையா தாஸ்; தயாரிப்பு:- அஞ்சலிதேவி, ஆதிநாராயண ராவ், - அஞ்சலி பிக்சர்ஸ், இயக்கம்:- வேதாந்தம் ராகவய்யா.



வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014



ம் ஹும்…ஓ ஹோ……..

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
.
செந்தாழம் பூவைக் கொண்டு 
சிங்காரம் பண்ணிக்கொண்டு

செந்தூரப் பொட்டும் வைத்து 
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…
சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு,
மோகம் தீருமே…

ம் ஹும்…ஓ ஹோ……..

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
.
தழுவாத தேகம் ஒன்று
தணியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும்……தேன் கிண்ணமும்
நீ தேடிவா…ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…
.
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
ம் ஹும்…ஓ ஹோ……..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- உல்லாச பறவைகள்;
ரிலீஸ்:- 07த மார்ச் 1980;
இசை:- இளையராஜா;
பாடலாசிரியர்:- பஞ்சு அருணாசலம்;
பாடியவர்கள்:- ஜென்சி;
நடிப்பு:- தீபா, கல்ஹாசன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர......."





என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை
வாதை செய்யும்
வெட்கம் விடுமோ
ஹோய்...
.
(என்ன சொல்லி)
.
அறியாதவள் நான் தெரியாதவள் - முன்
அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே - அது
அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல...
எப்படி எழுத...
ம்ம்ம்ஹூஹூம்...
மஹாராஜ ராஜஸ்ரீ...
.
காற்றாகப் போனாலும் - அவர்
கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் - அவர்
கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும்
சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா...
கண்ணா... கண்ணா...
.
(என்ன சொல்லி)
.
இதயம் துடிக்குது - என்
செவிக்கே கேட்குதம்மா
கேட்குதம்மா
வளையல் நடுங்குது - வாய்
வார்த்தை குளறுதம்மா... குளறுதம்மா...
என்ன செய்ய..
என்ன செய்ய...
ம்ம்ம்ஹூஹூம்...
.
காத்தாடி போலானேன் - என்
கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன் - என்
கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக
கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா...
கண்ணா.. கண்ணா...
.
(என்ன சொல்லி)
.
படம்:- இராணித் தேனீ;

ரிலீஸ்:- 09th அக்டோபர் 1982;
இசை: இளையராஜா;
பாடியவர் : பி. சுசீலா;
நடிகை:- மஹாலக்ஷ்மி;
இராகம்:- சிந்து பைரவி.
~~~~~~~~~~~~~~~~~


நீ வருவாய் என நான் இருந்தேன்...



நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
.
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
.
(நீ வருவாய்..)
.
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
.
(நீ வருவாய்..)
.
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
.
(நீ வருவாய்..)
~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- சுஜாதா - 1980;
இசை:- MS விஸ்வநாதன்;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்:- கல்யாணி மேனன்;

நடிப்பு:- ராஜலட்சுமி, சரிதா, ஷங்கர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு....



ஆ: 
கூடையில கருவாடு 
கூந்தலிலே பூக்காடு,
கூடையில கருவாடு 
கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு 
ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு 
கத்து கிட்டா எங்கூத்து
என்னுயிர் ரோசா 
எங்கடி போறே
மாமலர் வண்டு 
ஆடுது இங்கு
அம்மாளு  
அம்மாளே..

குழு: 
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோடகோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

ஆ: 
அல்லி வட்டம் புள்ளி வட்டம் 
நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம் புள்ளி வட்டம் 
நானறிஞ்ச நிலா வட்டம்,
பாக்குறது பாவமில்லே
புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே
ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே 
போரவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா 
எங்கடி போறே
மாமலர் வண்டு 
ஆடுது இங்கு
அம்மாளு 
அம்மாளே..

குழு: 
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

ஆ: 
ஆயிரத்தில் நீயே ஒண்ணு 
நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு 
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி
ஆஹா..
ஓடாதடி காவேரி
உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா 
எங்கடி போறே
மாமலர் வண்டு 
ஆடுது இங்கு
அம்மாளு 
அம்மாளே..

குழு: 
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆ: 
என்னுயிர் ரோசா 
எங்கடி போறே
மாமலர் வண்டு 
ஆடுது இங்கு
அம்மாளு அம்மாளே
அம்மாளு அம்மாளே..

~~~~~~~~~~~~~~~
படம்:- ஒரு தலை ராகம்,
ரிலீஸ்:- 02nd மே 1980;
இசை, பாடல்:- T.ராஜேந்தர்,
பாடிவர்கள்:- மலேசியா வாசுதேவன் & குழுவினர்,
நடிப்பு:- சங்கர், ரவீந்தர், சந்திரசேகர், உஷா, ரூபா.