ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
.
செந்தாழம் பூவைக் கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…
சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு,
மோகம் தீருமே…
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
.
தழுவாத தேகம் ஒன்று
தணியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும்……தேன் கிண்ணமும்
நீ தேடிவா…ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…
.
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
ம் ஹும்…ஓ ஹோ……..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- உல்லாச பறவைகள்;
ரிலீஸ்:- 07த மார்ச் 1980;
இசை:- இளையராஜா;
பாடலாசிரியர்:- பஞ்சு அருணாசலம்;
பாடியவர்கள்:- ஜென்சி;
நடிப்பு:- தீபா, கல்ஹாசன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக