வியாழன், 7 ஆகஸ்ட், 2014

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர......."





என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை
வாதை செய்யும்
வெட்கம் விடுமோ
ஹோய்...
.
(என்ன சொல்லி)
.
அறியாதவள் நான் தெரியாதவள் - முன்
அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே - அது
அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல...
எப்படி எழுத...
ம்ம்ம்ஹூஹூம்...
மஹாராஜ ராஜஸ்ரீ...
.
காற்றாகப் போனாலும் - அவர்
கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் - அவர்
கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும்
சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா...
கண்ணா... கண்ணா...
.
(என்ன சொல்லி)
.
இதயம் துடிக்குது - என்
செவிக்கே கேட்குதம்மா
கேட்குதம்மா
வளையல் நடுங்குது - வாய்
வார்த்தை குளறுதம்மா... குளறுதம்மா...
என்ன செய்ய..
என்ன செய்ய...
ம்ம்ம்ஹூஹூம்...
.
காத்தாடி போலானேன் - என்
கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன் - என்
கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக
கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா...
கண்ணா.. கண்ணா...
.
(என்ன சொல்லி)
.
படம்:- இராணித் தேனீ;

ரிலீஸ்:- 09th அக்டோபர் 1982;
இசை: இளையராஜா;
பாடியவர் : பி. சுசீலா;
நடிகை:- மஹாலக்ஷ்மி;
இராகம்:- சிந்து பைரவி.
~~~~~~~~~~~~~~~~~


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக