வெள்ளி, 30 மே, 2014

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா..



ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட
மாராப்பு மெல்ல தொட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~

படம்:- கேப்டன் பிரபாகரன்,
இசை:- இளையராஜா;
பாடல்:- பிறைசூடன்;
பாடியவர்:- ஸ்வர்ணலதா;
நடிப்பு:- ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான்.

  

ஆசையக் காத்துல தூது விட்டு...



ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

(ஆசையக் காத்துல..)

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

(ஆசையக் காத்துல..)

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

(ஆசையக் காத்துல..)
~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- ஜானி - 1985;
இசை:- இளையராஜா;
பாடல்:- கங்கை அமரன்;
பாடியவர்:- எஸ்.பி.சைலஜா;
நடிப்பு:- சுபாஷினி, ரஜினிகாந்த்.


ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா, என் மாமா...



ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா, என் மாமா,
புது ரோசா நான் என்னோடு, 
என் ராசாவே வந்தாடு,
என் செல்லக்குட்டி,..

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா..

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்,
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்,
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்,
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்,
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்,
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்,
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்,
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான்,
என் செல்லக்குட்டி,

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா..

சின்ன சிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்,
தங்கத்தட்டு நான் நல்ல தாழம்பூ நான்,
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்,
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்,
என் மச்சானே என்னோடு நீர் ஆடலாம்,
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்,
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்,
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான்,
என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா..
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி
ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்.
~~~~~~~~~
படம்:- மறுபடியும்;
ரிலீஸ்:- 14th ஜனவரி 1993;
இசை:- இளையராஜா;
பாடல்:- ரவி பாரதி;
பாடியவர்:- எஸ்.ஜானகி;.
நடிப்பு:- ரோகினி.


புதன், 28 மே, 2014

அதோ வாராண்டி வாராண்டி....



அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ,
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ,
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா
.
.
சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவோ
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவோ,
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக 
கண்ணோடு கண்ணாக
அதோ வாராண்டி வாராண்டி 
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா 
ஏதேதோ சொன்னானம்மா..

~~~~~~~~~~~
படம்:- பொல்லாதவன்;
ரிலீஸ் :- 06th November 1980;
இசை:- எம்.எஸ்.விசுவநாதன்,
பாடல் வரிகள்:- கண்ணதாசன்,
குரல்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜெயராம்,
நடிப்பு:- ரஜினிகாந்த், ஸ்ரீ பிரியா.
~~~~~~~~~~~





நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா....




நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை, 
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
.
.
கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால், - அங்கே
கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு,
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு - அஞ்சும்
கோழை அல்ல, பேதை அல்ல வீரம் உண்டு,
கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால், - அங்கே
கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு,
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு - அஞ்சும்
கோழை அல்ல, பேதை அல்ல வீரம் உண்டு,
பூ போல கையை கொண்டு, போனாலே நன்மை உண்டு,
பூ போல கையை கொண்டு, போனாலே நன்மை உண்டு,
.
.
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
.
.
மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி, - அங்கே
மாடி, மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன
வானை கீரி அந்த வைகுண்டத்தை, - இந்த
ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன,
மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி, - அங்கே
மாடி, மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன
வானை கீரி அந்த வைகுண்டத்தை, - இந்த
ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன,
தள்ளாடும் பேதை பெண்ணே, வெள்ளாடு வேங்கை அல்ல,
தள்ளாடும் பேதை பெண்ணே, வெள்ளாடு வேங்கை அல்ல,
.
.
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
________
படம்:-  பொல்லாதவன்;
ரிலீஸ்:- 06th November 1980;
இசை:- எம்.எஸ்.விசுவநாதன்,
பாடல் வரிகள்:- கண்ணதாசன்,
குரல்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
நடிப்பு:- ரஜினிகாந்த், லக்ஷ்மி.


வெள்ளி, 23 மே, 2014

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..





லலாலா....லாலா...லலாலா....லாலா..
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....


மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதில்லா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா...
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- பட்டினப் பிரவேசம் - (1977);
இசையமைப்பாளர்:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்;

பாடியவர்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்;
இயற்றியவர்:- கவியரசர் கண்ணதாசன்;
வயலின் வாசித்தவர்:- மணி;
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 22 மே, 2014

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது



பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன் கழுத்தில் இருந்து...) 


வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது..
அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன் கழுத்தில் இருந்து...) 


நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது..
இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது..

~~~~~~~~~~~~~~~
படம்:- சூரியகாந்தி, - 1973;
இசை:- M.S.விஸ்வநாதன்,(MSV);
பாடியவர்:- T.M.சௌந்தர்ராஜன்,(TMS);
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
நடிப்பு:- கண்ணதாசன், (பாடுபவர்), ஜெயலலிதா, முத்துராமன்.
~~~~~~~~~~~~~~~



ஆண்டவனே உன் பாதங்களை...



இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு,
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
நம்பிக்கையின் ஒளி விளக்கு


ஆண்டவனே உன் பாதங்களை - நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
முருகையா...

(ஆண்டவனே உன் பாதங்களை...)


பன்னிரண்டு கண்களிலே, 
ஒன்றிரண்டு மலர்ந்தாலும்,
என்னிரண்டு கண்களிலும், 
இன்ப ஒளி உண்டாகும்,
உள்ளமது உள்ளவரை, 
அள்ளித் தரும் நல்லவரை,
விண்ணுலகம் வாவென்றால், 
மண்ணுலகம் என்னாகும்..

(ஆண்டவனே உன் பாதங்களை...)


மேகங்கள் கண் கலங்கும்,
மின்னல் வந்து துடி துடிக்கும்,
வானகமே உருகாதோ, 
வள்ளல் முகம் பாராமல்,
உன்னுடனே வருகின்றேன், - என் 
உயிரைத் தருகின்றேன்,
மன்னன் உயிர் போகாமல்,
இறைவா நீ ஆணையிடு,
இறைவா நீ ஆணையிடு.....
ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா....

~~~~~~~~~~
Movie:- "OLI VILAKKU";
Year of Release:- 1969;
Music:- M.S.Viswanathan (MSV); 
Lyrics:- Vaali;
Playback:- P.Susheela;

Cast:- Sowkar Janak, & MGR.
~~~~~~~~~~~


.



Tera Mera Pyaar Amar......

Tera Mera Pyaar Amar, Phir Kyon Mujhako Lagata Hai Dar,
Tera Mera Pyaar Amar, Phir Kyon Mujhako Lagata Hai Dar,
(Our love is immortal.Then why do these silly fears worry me)

Mere Jivan Saathi Bata, Kyon Dil Dhadake Rah-Rah Kar
(Tell me oh my beloved, Why is my heart in a sweet reverie)

(Tera Mera Pyaar Amar....)

Kya Kaha Hai Chaand Ne, Jisako Sunake Chaandani
Har Lahar Pe Jhum Ke, Kyon Ye Naachane Lagi
Chaahat Ka Hai Harasu Asar, Phir Kyon Mujh Ko Lagata Hai Dar

(Tera Mera Pyaar Amar....)

Kah Raha Hai Mera Dil, Ab Ye Raat Na Dhale
Khushiyon Ka Ye Silasila, Aise Hi Chala Chale
Tujhako Dekhun, Dekhun Jidhar, Phir Kyon Mujh Ko Lagata Hai Dar

(Tera Mera Pyaar Amar......)

Hai Shabaab Par Umang, Har Khushi Javaan Hai
Meri Donon Baahon Men, Jaise Aasmaan Hai
Chalati Hun Main Taaron Par, Phir Kyon Mujh Ko Lagata Hai Dar

(Tera Mera Pyaar Amar.......)

English Translation.
***********************
Our love is immortal, then why do these silly fears worry me?
Tell me oh my beloved, Why is my heart in a sweet reverie?

What did the mighty moon say after all?
What were the words that lift and buoy,
The moonlight today as it dances
on these waves in an abundant joy?
It sways and swirls and prances,
As if it stars in a vibrant, medieval ball.
Everywhere that I see are signs of love’s joyful glee.

(Tell me oh my beloved………)


My heart says that this memorable night
Should never come to an end.
This caravan of happiness should move on bright
And never reach a craggy bend.
And no matter how much I try to hide
I know that you are by my side.

(Tell me oh my beloved………)


My beauty now has a vibrance too.
Every joy is alive and young.
It’s almost as if the sky, fresh, anew
Is bathed in a celestial light,
And in my arms copiously hung.
I feel I am walking on stars tonight.

Our love is immortal.
Then why do these silly fears worry me?
Tell me oh my beloved………
Why is my heart in a sweet reverie?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Movie:-  Asli Naqli;
Year:- 1962;
Music:- Shankar, Jaikishan;
Lyricist:- Shailendra;
Singer:- Lata Mangeshkar;
Cast:- Dev Anand, Sadhana Shivdasani;
Directed by:- Hrishikesh Mukherjee.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





மலை ராணி முந்தானை சரிய சரிய....



மலை ராணி முந்தானை சரிய சரிய, 
மண் மாதா வண்ணமடி விரிய விரிய, 
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ, 
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...

(மலை ராணி முந்தானை...) 


கடல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி, 
காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி, 
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி, 
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி,
தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி,  
மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி,
மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி..

(மலை ராணி முந்தானை...) 


பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும், 
பொட்டு வைத்த குல மகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும், 
நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ,
நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ, 
எங்கே வந்தாய் எங்கே செல்வாய் இந்த பெண்ணே தோழி 
எந்தன் பெண்மை உன்னை போலே இன்பம் கொண்டேன் வாழி...

(மலை ராணி முந்தானை...) 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Movie:- "Ore Vaanam Ore Bhoomi" - 1979; 
Musci by:- MSV; 
Lyrics by:- Kannadasan; 
Singers:- Vani Jayaram & Jolly abhraham; 
Actress:- K.R.Vijaya. 
(Very first Indian (Tamil) Film shot in Niagara Falls, Canada.)