வெள்ளி, 23 மே, 2014

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..

லலாலா....லாலா...லலாலா....லாலா..
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதில்லா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா....

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா...
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- பட்டினப் பிரவேசம் - (1977);
இசையமைப்பாளர்:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்;

பாடியவர்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்;
இயற்றியவர்:- கவியரசர் கண்ணதாசன்;
வயலின் வாசித்தவர்:- மணி;
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக