வியாழன், 22 மே, 2014

மலை ராணி முந்தானை சரிய சரிய....



மலை ராணி முந்தானை சரிய சரிய, 
மண் மாதா வண்ணமடி விரிய விரிய, 
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ, 
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...

(மலை ராணி முந்தானை...) 


கடல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி, 
காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி, 
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி, 
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி,
தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி,  
மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி,
மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி..

(மலை ராணி முந்தானை...) 


பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும், 
பொட்டு வைத்த குல மகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும், 
நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ,
நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ, 
எங்கே வந்தாய் எங்கே செல்வாய் இந்த பெண்ணே தோழி 
எந்தன் பெண்மை உன்னை போலே இன்பம் கொண்டேன் வாழி...

(மலை ராணி முந்தானை...) 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Movie:- "Ore Vaanam Ore Bhoomi" - 1979; 
Musci by:- MSV; 
Lyrics by:- Kannadasan; 
Singers:- Vani Jayaram & Jolly abhraham; 
Actress:- K.R.Vijaya. 
(Very first Indian (Tamil) Film shot in Niagara Falls, Canada.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக