புதன், 28 மே, 2014

நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா....




நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை, 
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
.
.
கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால், - அங்கே
கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு,
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு - அஞ்சும்
கோழை அல்ல, பேதை அல்ல வீரம் உண்டு,
கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால், - அங்கே
கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு,
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு - அஞ்சும்
கோழை அல்ல, பேதை அல்ல வீரம் உண்டு,
பூ போல கையை கொண்டு, போனாலே நன்மை உண்டு,
பூ போல கையை கொண்டு, போனாலே நன்மை உண்டு,
.
.
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
.
.
மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி, - அங்கே
மாடி, மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன
வானை கீரி அந்த வைகுண்டத்தை, - இந்த
ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன,
மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி, - அங்கே
மாடி, மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன
வானை கீரி அந்த வைகுண்டத்தை, - இந்த
ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன,
தள்ளாடும் பேதை பெண்ணே, வெள்ளாடு வேங்கை அல்ல,
தள்ளாடும் பேதை பெண்ணே, வெள்ளாடு வேங்கை அல்ல,
.
.
நானே என்றும் ராஜா, ஆனால் முள்ளில் ரோஜா,
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை,
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
________
படம்:-  பொல்லாதவன்;
ரிலீஸ்:- 06th November 1980;
இசை:- எம்.எஸ்.விசுவநாதன்,
பாடல் வரிகள்:- கண்ணதாசன்,
குரல்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
நடிப்பு:- ரஜினிகாந்த், லக்ஷ்மி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக