இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு,
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை - நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
முருகையா...
(ஆண்டவனே உன் பாதங்களை...)
பன்னிரண்டு கண்களிலே,
ஒன்றிரண்டு மலர்ந்தாலும்,
என்னிரண்டு கண்களிலும்,
இன்ப ஒளி உண்டாகும்,
உள்ளமது உள்ளவரை,
அள்ளித் தரும் நல்லவரை,
விண்ணுலகம் வாவென்றால்,
மண்ணுலகம் என்னாகும்..
(ஆண்டவனே உன் பாதங்களை...)
மேகங்கள் கண் கலங்கும்,
மின்னல் வந்து துடி துடிக்கும்,
வானகமே உருகாதோ,
வள்ளல் முகம் பாராமல்,
உன்னுடனே வருகின்றேன், - என்
உயிரைத் தருகின்றேன்,
மன்னன் உயிர் போகாமல்,
இறைவா நீ ஆணையிடு,
இறைவா நீ ஆணையிடு.....
ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா....
~~~~~~~~~~
Movie:- "OLI VILAKKU";
Year of Release:- 1969;
Music:- M.S.Viswanathan (MSV);
Lyrics:- Vaali;
Playback:- P.Susheela;
Cast:- Sowkar Janak, & MGR.
~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக