வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு, நான்
சைதாப்பேட்ட கொக்கு...
.
.
வாராவதிலே நின்னுகினிருந்தேன்
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அம்பிகாபதியாட்டம்..
வாராவதிலே நின்னுகினிருந்தேன்
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அம்பிகாபதியாட்டம்,
லவ்வாப் பாத்து சோக்கா பேசி
டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி
டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு
படா பேஜாராச்சி நின்னு - அட
சர்தான் வாம்மா கண்ணு
படா பேஜாராச்சி நின்னு
.
.
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
.
.
நைனா உன் நினப்பாலே நான்
நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆ...
நைனா உன் நினப்பாலே நான்
நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன்
சால்னா நெனப்பு வந்தாச்சு
அட மச்சான் ஆ........
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன்
சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா
பாயாக்கறியும் நீயாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா
பாயாக்கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து
வாராவதிக்கே போகல்லாம்,
.
.
வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
.
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு..
~~~~~~
படம்:- பெம்மலாட்டம் - 1968;
இசை:- V.குமார்;
இயற்றியவர்:- வாலி;
பாடியவர்:- மனோரமா;
நடிப்பு:- மனோரமா, சோ.ராமசாமி.
~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக