தேவி என் தேவி நீ தானே - அழகிய
வேலி பொன் வேலி நான் தானே
அன்னமே உனது அழகினில் கண்படும்
முன்னமே உனது நிழலுக்கும் திரையிடவோ
ஆ ஆ
.
தேவி உன் தேவி நான் தானே - அழகிய
வேலி பொன் வேலி நீதானே
அன்பனே எனது அழகினில் கண்படும்
முன்னமே எனது நிழலுக்கும் திரையிடவா
ஆ ஆ
.
தேவி என் தேவி நீ தானே...
.
வாடினாள் இந்தப் பூவனம் - உந்தன்
பார்வைதான் எந்தன் ஜீவனம்
வாடினாள் இந்தப் பூவனம் - உந்தன்
பார்வைதான் எந்தன் ஜீவனம்
மெத்தை மீதெனை முத்துப் பூங்கொடி தொற்றித் தூங்கிடுமோ
அறியாமலே அறை நாடகம் அரங்கேறுமோ
ஆ ஆ
மெத்தை மீதெனை முத்துப் பூங்கொடி தொற்றித் தூங்கிடுமோ
அறியாமலே அறை நாடகம் அரங்கேறுமோ
தீராத மோகம் நான் தீர்க்கவா
யார் போட்ட கோடு நீ தாண்டி வா
ரகசியம், ரகசியம்,
கால நேரம் பார்த்து வா
.
தேவி என் தேவி நீ தானே - அழகிய
வேலி பொன் வேலி நான் தானே
அன்பனே எனது அழகினில் கண்படும்
முன்னமே எனது நிழலுக்கும் திரையிடவா
ஆ ஆ
.
தேவி என் தேவி நீ தானே...
.
பார்வையால் ஒரு சேதியோ - இமை
சாய்வதும் ஒரு ஜாடையோ
பார்வையால் ஒரு சேதியோ - இமை
சாய்வதும் ஒரு ஜாடையோ
கள்ளப் பார்வையில் உள்ளத்தாமரை மெல்லப் பூத்ததுவோ
சுக லீலையில் இடைவேளையே கிடையாதடி
ஓ ஓ
கள்ளப் பார்வையில் உள்ளத்தாமரை மெல்லப் பூத்ததுவோ
சுக லீலையில் இடைவேளையே கிடையாதடி
உன் தோள்கள் என்ன இடி தாங்கியோ
என் பெண்மை என்ன சுமை தாங்கியோ
மலர்களின் தலையிலே வண்டு என்ன பாரமோ
.
தேவி உன் தேவி நான் தானே - அழகிய
வேலி பொன் வேலி நீதானே
அன்னமே உனது அழகினில் கண்படும்
முன்னமே உனது நிழலுக்கும் திரையிடவோ
ஆ ஆ
தேவி உன் தேவி நான் தானே
தேவி என் தேவி நீ தானே.
~~~~~~~~~~~~~
திரைப்படம்:- வேலி;
ரிலீஸ்:- 24th ஜூலை 1985;
இசை:- சங்கர், கணேஷ்;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்;
நடிப்பு:- ராஜேஷ், சரிதா;
புரடக்சன்:- சுனிதா சினி ஆர்ட்ஸ்;
இயக்கம்:- துரை.
~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக