ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
.
தொடர்கதையா
இல்லை புதிய கதை
.
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
.
வைரவெட்டுக் கண்ணங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள்
காதல் தேனூற
கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள்
காலம் கை கூட
வைரவெட்டுக் கண்ணங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள்
காதல் தேனூற
கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள்
காலம் கை கூட
மலர்களில் பட்டு வந்த தென்றல்
உடல்களை தொட்டு நின்றதென்னவோ
விழிதனை கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ
.
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே
.
கண்கள் விளையாடுகின்றன
கவிதை உருவாகிறது
.
பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
பாவம் கொண்டாட
அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள்
ஆசை நீரோட
.
பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
பாவம் கொண்டாட
அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள்
ஆசை நீரோட
மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ
சுகம் வரும் என்று வந்த மன்னன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ
.
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே.
..................
https://youtu.be/hwb0L7c4f3c
....................
Movie:- Roshakkari;
Release date:- 17th June 1974;
Music:- MSV;
Lyrics:- Kannadasan;
Singers:- P.Susheela, SPB;
Cast:- K.R.Vijaya, Ravichandran;
Screenplay, Dialogue & Direction:- Madurai Thirumaran.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக