நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்
உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்
மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்
மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்
.
நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
.
பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது
பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது
ஆளழகு பாதி தோளழகு பாதி
ஆளழகு பாதி தோளழகு பாதி
கூட்டிவந்து என்னை வாட்டுவது என்ன
கூட்டிவந்து என்னை வாட்டுவது என்ன
அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
.
நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
.
போய் வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக்கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது
போய் வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக்கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது
கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
மன்மதனின் சொந்தம் மங்கை ரதி தானே
மன்மதனின் சொந்தம் மங்கை ரதி தானே
கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு
கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு
.
நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~
திரைப்படம்:- மல்லிகைப் பூ;
ரிலீஸ்:- 07th டிசம்பர் 1973;
இசை:- வி.குமார்;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- TMS & P. சுசிலா;
நடிப்பு:- முத்துராமன், பிரமிளா;
தயாரிப்பு & இயக்கம்:- N.S.மானியம்.
~~~~~~~~~~~~~~~~
https://youtu.be/UcBavbbKYB8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக