கணக்குப் பார்த்து காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது
.
(கணக்கு... )
.
இலக்கிய காதலுக்கு இங்கே வேலையில்லை
எல்லாமே காவியம் இல்லை
கற்பனை உலகத்திலே ஆசைகளும் இல்லை
கனவுக்கும் வேலை இல்லை
நடுத்தர குடும்பத்துக்கு பட்ஜெட்தானே எல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால் எந்நாளுமே தொல்லை
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது
.
(கணக்கு... )
.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை வேறு வேறு
எல்லாமே இணைவது இல்லை
ஒருவரையொருவர் நன்றாய் புரிந்துக்கொள்ளும் முன்னே
சேர்ந்தால் வருவது தொல்லை
பின்னால் நடப்பதெல்லாம் முன்னால் புரிவதில்லை
முன்னால் புரிந்துவிட்டால் வாழ்வில் சுவையில்லை
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது
.
(கணக்கு... )
.........................
திரைப்படம்:- ஆளுக்கொரு ஆசை;
ரிலீஸ்:- 09th டிசம்பர் 1977;
இசை:- இளையராஜா;
பாடல்:- பஞ்சு அருணாச்சலம்;
பாடியவர்:- T.M. சௌந்தர்ராஜன்;
நடிப்பு:- ஜெயசித்ரா, R. முத்துராமன்;
தயாரிப்பாளர்:- ஏ. ராமமூர்த்தி & சினி எண்டர்பிரைசெஸ்
எஸ். ராமமூர்த்தி;
டைரக்சன்:- S.P. முத்துராமன்.
https://youtu.be/D6nc_IqCYaA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக