சகானா இருபத்தெட்டாவது மேளகர்த் தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம் போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~
இந்த இராகத்தில்
சட்சம் (ச),
சதுச்ருதி ரிசபம் (ரி2),
அந்தர காந்தாரம் (க3),
சுத்த மத்திமம் (ம1),
பஞ்சமம் (ப),
சதுச்ருதி தைவதம் (த2),
கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் ஆரோகண அவரோகணங்கள்.
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 ப ம1 த2, நி2ச |
அவரோகணம்: | ச நி2த2 ப ம1 க3 ம1 ரி2 க3 ரி2 ச |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரோகணம்:-> ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறை யே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
உம்:- ஸ ரி க ம ப த நி ஸ்.
அவரோகணம்:-> இறங்குவரிசை (அவரோ கணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறை யே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
உம்:- ஸ் நி த ப ம க ரி ஸ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் மத்திமம். காந்தாரம் என்பனவும் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகிறது.
இந்த ராகத்தில் வெளிவந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்.
(1) பாடல்:- "பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில்..."
படம்:- வீர அபிமன்யு - 1965;
இசை:- K.V.மகாதேவன்;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசிலா;
நடிப்பு:- ஏவிஎம்.ராஜன், காஞ்சனா.
(2) "எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்...."
படம்:- பொம்மை;
ரிலீஸ்:- 22nd ஏப்ரல் 1964;
இசை:- S.பாலசந்தர்;
பாடல் ஆசிரியர்:- வித்வான் வே.லக்ஷ்மணன்;
பாடியவர்:- P.சுசிலா;
நடிப்பு:- L.விஜயலட்சுமி.
http://youtu.be/J_W5u3U4FYQ
(3) பாடல்:- "ருக்கு ருக்கு ருக்கு....."
திரைப்படம்:- அவ்வை சண்முகி;
ரிலீஸ்:- 10th நவம்பர் 1996;
இசை:- தேவா;
பாடல் ஆசிரியர்:- வாலி;
பாடியவர்கள்:- கமல்ஹாசன், சுஜாதா;
நடிகர்கள்:- கமல்ஹாசன்,மீனா.
http://youtu.be/DTRA_Ng6WEU
(4) பாடல்:- "அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா தலைவா சுகமா சுகமா..."
திரைப்படம்:- பார்த்தாலே பரவசம்;
ரிலீஸ்:- 14 th நவம்பர் 2001;
இசை:- A.R.ரஹ்மான்;
பாடல் ஆசிரியர்:- வைரமுத்து;
பாடியவர்கள்:- சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்;
நடிகர்கள்:- மாதவன், சிம்ரன்.
http://youtu.be/c3v_-4Qb0yw
(5) பாடல்:- "பூந்தேனா....."
திரைப்படம்:- ஈர நிலம்;
ரிலீஸ்:- 08th ஆகஸ்ட் 2003;
இசை:- சிற்பி;
பாடியவர்:- சின்மயி.