அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே
.
(அலங்கார...)
.
வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்
மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
அழகு கலைகள் நிலவும் எந்தன்
.
(அலங்கார...)
.
ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்
கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
இளமை குலுங்க இனிமை வழங்கும்
.
(அலங்கார...)
.
காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூசைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
புதிய வழியை எடுத்து சொல்லும்
.
(அலங்கார...)
.
Movie:- Sonnathu Neethana;
Year:- 1978;
Music Director:- Ilayaraja;
Lyricist:- C.N.Muthu;
Singers:- Malaysia Vasudevan, Jency (Humming);
Cast:- Jaiganesh, Sumithra;
Produced by:- M.S.Chellappan - Vijaya Raja Pictures;
Direction:- C.N.Muthu.
.......
https://mio.to/album/Sonnathu+Nee+Thaana+%281978%29